Thursday, August 4, 2011

மனித உடலியல்

•மனித இதயம் சராசரியாக நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது?
72 முறை
• சிவப்பு இரத்த அணுக்கள் உடலில் எந்த உறுப்பில் உற்பத்தியாகின்றன?
எலும்பு மஜ்ஜை

•மூளையின் எந்தப் பகுதி நமது உடலின் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்துகிறது?
ஹைப்போதாலமஸ்

•நமது உடம்பில் மிகச் சிறிய எலும்பு எது?

காதில் உள்ள ஸ்டேப்ஸ் என்னும் எலும்பு

பிறந்ததற்குப் பின்னர் மனித உடலில் வளர்ச்சியடையாத ஒரே பகுதி எது?

கண்களின் கருவிழிப் படலம்

மனித உடம்பில் சராசரியாக எத்தனை எலும்புகள் உள்ளன?

206


இந்தியா

• இந்தியாவில் எங்கு குங்குமப் பூ அதிகம் விளைகிறது?
காஷ்மீர்

அறிவியல் அறிவோம்

• முதன்மை வண்ணங்கள் (Primary Colors) என்றழைக்கப்படும் மூன்று நிறங்கள் சிவப்பு, பச்சை, ஊதா.

கண்டுபிடிப்புகள்

•ரேடியத்தைக் கண்டுபிடித்தவர்
மேரி கியூரி

சாதித்த மங்கையர்கள்

•டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் பெண்
சந்தியா அகர்வால்

தமிழகத் தகவல்கள்

•மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் எத்தனை தூண்கள் உள்ளன?


985 தூண்கள்



Wednesday, August 3, 2011

நாடுகளை அறிவோம்

• படகுப் போக்குவரத்து மட்டுமே உள்ள நாடு எது?
லாவோஸ்
•சிறைசாலை இல்லாத நாடு எது?
வாடிகன் நகர்
• இந்தியாவிலிருந்து எந்த நாட்டுக்குச் செல்ல விசா தேவையில்லை?
பூட்டான்
* அலுவலகங்களில் ஆணும் பெண்ணும் ஒன்றாக வேலை செய்ய தடை விதிக்கும் நாடு எது?
சவுதி அரேபியா
• எந்த நாட்டில் பொதுத் தொலைபேசியில் மக்கள் இலவசமாகப் பேசலாம்-
கியூபா

விலங்கியல்

•மேல் தாடையை அசைக்கக் கூடிய விலங்கு எது?
அலிகேட்டர் (முதலை வகை)
•ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில் எத்தனை முள்ளெழும்புகள் உள்ளன?
ஏழு

Sunday, July 31, 2011

சிறப்புப் பெயர்கள்


இந்தியாவின் சுவிட்சர்லாந்து - பெங்களுரூ

வினா - விடை

ஓடும் விமானத்தில் பிறக்கும் குழந்தை எந்த நாட்டின் பிரஜை?
                  விமானம் எந்த நாட்டில் பிறக்கிறதோ அந்த நாட்டின் பிரஜை

Saturday, July 30, 2011

பக்தனாய் மாறு

*நீ...
 தீமை கண்டால்
 ஆர்த்தெழும் பேரலையாய் மாறு!

*நீ...
 தீண்டாமை கண்டால்
 தீண்டிடும் ராஜ நாகமாய் மாறு!

*நீ...
  நன்மை கண்டால்
 அடிபணியும் அடிமையாய் மாறு! 

*நீ...
 வாய்மை கண்டால்
 வணங்கிடும் பக்தனாய் மாறு!

இந்தியாவின் முக்கிய தினங்கள்

சுதந்திர தினம்                            ஆகஸ்ட் 15
குடியரசு தினம்                          ஜனவரி 26
காந்தி ஜெயந்தி                         அக்டோபர் 2
குழந்தைகள் தினம்                  நவம்பர் 14
ஆசிரியர் தினம்                         செப்டம்பர் 5 

பொது அறிவுப் புதையல்

*மகாராஷ்டிரத்தின் பண்பாட்டுத் தலைநகர் புனே.
*தேவகியின் எட்டாவது குழந்தை கண்ணன்.
*பத்து ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து இருக்கும்.
*அல்ஜீப்ரா குறித்த விளக்க நூல் லீலாவதி.
*உலகில் உள்ள நீரில் 97% கடலில் உள்ளது.
*ஷெர்லாக் ஹோம்ஸ் நூலின் ஆசிரியர் சர். ஆர்தர் கானன்டாயிலின்.
*குஜராத்தின் தலைநகரம் காந்திநகர்.
*செல்சியஸ் என்பதும் சென்டிகிரேடு என்பதும் ஒரே அளவு தான்.
*இந்தியாவின் மிகப் பெரிய நதி கங்கை.
*இதுவரை புக்கர் பரிசு பெற்ற ஒரே இந்தியர் அருந்ததிராய்.
*தாவர எண்ணெயை வனஸ்பதியாக மாற்றுவது ஹைட்ரஜன்.
*மூளை இறந்த பின்பும் கூட இதயம் துடித்துக் கொண்டிருக்கலாம்.
*முதுகெலும்பில் 33 எலும்புகள் உள்ளன.
*காவிரி ஆறு குடகு மலையில் உருவாகிறது.
*"தத்துவ ஞானிகள் ஆட்சியாளர்களாக வேண்டும்" என்று கூறியவர் 
   பிளாட்டோ.
*"சீன நாகரிகத்தின் தொட்டில்" என்று அழைக்கப்படும் ஆறு மஞ்சள் ஆறு.
*பாண்டியர்கள் இடைச் சங்க காலத்தில் தலை நகரமாகக் கொண்ட நகரம் 
  கபாடபுரம்.

Group-II 2011(Tamil)

1. செல் கொள்கையை உருவாக்கியவர்

A) டார்வின்                                                             B) மெண்டல்                                         
C) ஸ்க்வான்                                                           D) ஒப்ரான்

விடை: ஸ்க்வான்

2. வட்ட வடிவ ஜீனோமு அல்லாத DNA இவ்வாறு அழைக்ககப்படுகிறது?

A)ஏற்கும் செல்                                                     B)பிளாஸ்மிட்                                           
C) கசையிழை                                                       D)பைலஸ்

விடை: பிளாஸ்மிட்

3. ஒரு கி.கி. நிறையுள்ள பந்தின் முடுக்கம் 1 மீ. வி-2  அளவை அடையத் தேவையான விசையைக் கணக்கிடுக.

A) 1N                                                                             B) 2N                                 
C) 3N                                                                             D) 4N

விடை: 1N

4. X - கதிரைக் கண்டறிந்தவர் யார்?

A)J.J. தாம்சன்                                                           B) ஃபாரடே                      
C) ராண்டஜன்                                                         D) ஹென்றி பெக்கொரல்.
விடை: ராண்டஜன்

5. எலக்ட்ரான் ஏற்கும் வினை .............................. எனப்படுகிறது.

A)எரிதல்                                                                    B) சிதைவுறுதல்     
C) ஆக்ஸிஜனேற்றம்                                          D) ஒடுக்கம்
விடை: ஒடுக்கம்


முயன்றால் முடியும்

முடியும் முடியும்
முயன்றால் முடியும்
முடியாதென்பது
முட்டாள்களின் முனகல்....

சின்னச் சின்ன தோல்விகள் தான்
சிகரம் எட்டும் வழியாகும்
தோல்வி கண்டு நடுங்கி நின்றால்
வெற்றி கனி தான் கிட்டாது....

தோல்வியைக் கண்டு துவளாமல்
நீ முயற்சி செய்து
எழுந்திட்டால் உன்னை வெல்ல
உலகம் கூட துணியாது!

போதும்

அழகின்கு வேண்டாம்...
அறிவு மட்டும் போதும்!

வெள்ளை நிறம் வேண்டாம்...
வெள்ளை மனம் போதும்!

இலட்சங்கள் வேண்டாம்...
இலச்சியமே போதும்!

திறமைசாலியாய் நீ திகழ...
உணர்ந்து கொள் தோழா!

Wednesday, July 27, 2011

கதிரவன்

•அழகான இளம் காலை நேரம்
 கீழ் வானம் மெல்ல வெளுக்க
 இருட்டை மெல்ல விரட்டி
 தன் செங்கதிர்களை மெல்லப் பரப்புகிறான்

•உலக ஜீவராசிகளுக்கெல்லாம்
 ஒளியை வழங்குகிறான்!



Monday, July 25, 2011

தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு அச்சுத்துறைக்கே : சாலமன் பாப்பையா தீர்ப்பு


தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு அச்சுத்துறைக்கே உள்ளது என சாலமன் பாப்பையா தீர்ப்பளித்தார். கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், இன்று மாலை பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு வெள்ளித்திரைக்கே, சின்னத்திரைக்கே, அச்சுத்துறைக்கே என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. இப்பட்டிமன்றத்தில் வாகை சந்திரசேகர், திண்டுக்கல் ஐ. லியோனி, நடிகர் எஸ்.வி. சேகர், திருப்பூர் கிருஷ்ணன், நக்கீரன் ஆர். கோபால் ஆகியோர் தத்தம் அணிகள் சார்பாக பேசினர். இறுதியில் பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையா, சாதாரண மக்களுக்கு எட்டாத கனியாக இருந்த தமிழ் இலக்கியத்தை நாடகத்துறையின் வாயிலாக பாமர மக்களும் அறியும் வண்ணம் கொண்டு சென்றது வெள்ளித்திரையே என்று குறிப்பிட்டார். தமிழ் இலக்கியங்களை வசனங்களாகவும், பாடல்களாகவும் சாதாரண மக்களுக்கு கொண்டு சென்றதில் வெள்ளித்திரைக்கு பெரும் பங்கு உண்டு என்று அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்திலுள்ள பல மொழி வழக்குகளை அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தியதிலும் வெள்ளித்திரையின் பங்கு அபாரமானது என்று தெரிவித்த அவர், ஆனால் தற்போது வெள்ளித்திரையில் தமிழ் பண்பாடு குறைந்து வெளிநாட்டு பண்பாடே அதிகம் இருப்பதாக வருத்தம் தெரிவித்தார். அதனால் தற்போது வெள்ளித்திரை தற்போது வைத்தியம் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். சின்னத்திரை குறித்து அவர் குறிப்பிடுகையில், சின்னத்திரையில் தற்போது, உடற்பயிற்சி, அறஇலக்கியம், பக்தி இலக்கியம், சட்டம், கவி அரங்கம், சமையல் உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், அதே போல் படத்திருட்டும் இருப்பதாக குறிப்பிட்டார். இவ்விஷயம் காரணமாக வெள்ளித்திரையை விட சற்றே மேம்பட்டது சின்னத்திரை என்று அவர் குறிப்பிட்டார். பின் அச்சுத்துறை குறித்து அவர் பேசுகையில், இன்று நாம் செம்மொழிக்கு விழா நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்து பெற்றதற்கு காரணம், நாம் தமிழ் இலக்கியங்களை பாதுகாத்து அவைத்திருப்பதே காரணம் என்று தெரிவித்தார். அவ்வாறு பாதுகாத்து வைக்கப்படாமல் இருந்திருந்தால், செம்மொழி பற்றி பேசிக்கொண்டு மட்டுமே இருந்திருக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.மேலும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை குறித்து விமர்சனம் தரும் தகுதி அச்சுத்துறைக்கே உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் ஜனநாயகத்தின் 4வது தூணாகவும் அச்சுத்துறை உள்ளதாக தெரிவித்த அவர், தற்போது அச்சுத்துறை இணையதளம் என்று வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார். இவையெல்லாம் வைத்து பார்க்கும் போது, தமிழை வளர்க்கும் பெரும் மற்ற இரண்டு துறைகளை விட அச்சுத்துறைக்கே உள்ளது என்று பேராசிரியர் சாலமன் பாப்பையா தீர்ப்பு வழங்கினார்.